ஜகதீஸ் சந்திர போஸ்

JC-Bose

மேற்கு வங்கத்தில், 1858-ல் பிறந்தார். இவர் ஒரு இயற்பியல், உயிரியல் மற்றும் தொல்பொருள் அறிஞர்.

கதிரலை (ரேடியோ) அறிவியலின் தந்தை என போற்றப் படுகிறார்.

நுண் கதிரலைகள் அறியும் கருவி (மைக்ரோ வேவ் ரேடியோ டிடெக்டர்) ஒன்றை உருவாக்கினார். இது பிற்காலத்தில், தொலை தொடர்புத் துறையில் பல ஆராய்ச்சிகளுக்கு உதவியது.

தாவரங்களின் உணர்வுகள் பற்றி ஆராய்ந்தார். தாவர வளர்ச்சி அறியும் கருவி ஒன்று கண்டு பிடித்தார்.

இவர் தன் ஆராய்ச்சி கட்டுரைகளை பொதுவானது என அறிவித்து, சக விஞ்ஞானிகளை பயன்படுத்துமாறு கூறினார்.

நோபல் பரிசு பெற்ற மின்னியல் விஞ்ஞானி நெவில் மோட் ஒருமுறை, “போஸின் கண்டு பிடிப்புகள் அவர் காலத்தில் இருந்து 60 வருடங்கள் முன்னோக்கி உள்ளன” என்று பாராட்டினார்.

Pages: 1 2 3 4 5 6 7 8 9