கொக்கும் நரியும்

நரி மாலையில் வீட்டுக்கு வந்தது. உடம்பு முழுதும் சேறாக இருந்தது.

பாட்டி “என்னடா, நெறய வேலையா” என்று கேட்டார்.

“ஆமாம் பாட்டி. களப்பா இருக்கு. எதாவது சாப்ட எடுத்து வை. நான் குளிச்சிட்டு வர்றேன்” என்றது.

பாட்டி கோபத்துடன் “ஏன் தோட்டத்துல குளிக்கலயா” என்றார்.

“கொக்குதான் பாட்டி அங்க குளிக்கும். எனக்கு பிடிக்காது” என்றது நரி.

பாட்டி தலையை ஆட்டிக் கொண்டே “அப்பிடியா” என்றார்.

பாட்டிக்கு உண்மை புரிந்தது.

கொக்கு தினம் வேலை செய்து-விட்டு வீட்டுக்கு வரும்போது சுத்தமாக வந்தது. நரியின் உடம்பில் சகதியை பார்த்து அதுதான் நிறைய வேலை செய்தது என நினைத்து இருந்தார்.

ஆனால் அது தவறு. அதை உணர்ந்த பாட்டிக்கு கோபம் வந்தது.

நரியை, “நீ வெளிய போ. எங்கூட இருக்காத” என்று பாட்டி கத்தினார்.

“உன்னால நல்ல கொக்கை வீட்டை-விட்டு விரட்டிட்டேன். இப்பதான் உண்மை தெரியுது”.

பாட்டியின் கோபமான கத்தல் கேட்டு நரி பயந்து ஓடியது.

பாட்டி இப்போது தனியானார்.

வெளி தோற்றம் வைத்து யாரையும் தீர்மானிக்க முடியாது என்று புரிந்து கொண்டார்.

பாட்டி தினமும் அந்த கொக்கை தேட ஆரம்பித்தார்.

Pages: 1 2 3 4

 © 2019-20 Tamilini. All rights reserved. No part can be reproduced.

Up ↑

error: Alert: Content is protected !!