கொக்கும் நரியும்

ஒரு அழகிய சிறு கிராமத்தில் ஒரு பாட்டி இருந்தார். அவர் ஒரு சிறிய வீட்டில் வாழ்ந்து வந்தார். பாட்டி ஒரு கொக்கு மற்றும் நரியை வளர்த்தார்.

பாட்டிக்கு வடை சுட்டு விற்பது வேலை. எனவே, கொக்கும் நரியும் பாட்டிக்கு தேவையான உதவிகள் செய்யும். பாட்டியின் தோட்டத்தில் வேலை பார்க்கும்.

அவை இரண்டும் காலையில் தோட்டத்துக்கு போகும். வேலை முடிந்து மாலையில் வீடு திரும்பும். நேரம் கிடைத்தால் பாட்டியும் தோட்டத்துக்கு போவார்.

பாட்டி அவை இரண்டையும் நன்றாக கவனித்து கொண்டார். மாலையில் அவைகள் வீடு வந்ததும் மூவரும் சாப்பிட்டு-விட்டு வெளியில் உட்கார்ந்து பேசுவார்கள்.

“இன்னக்கி வேல எப்படி இருந்துச்சு” என்று பாட்டி கேட்பார்.

கொக்கும் நரியும் தோட்டத்தில் நடந்தது பற்றி சொல்லும்.

இப்படியே நாட்கள் மகிழ்ச்சியாக போயின.

சில வருடங்கள் ஆயின.

Pages: 1 2 3 4

 © 2019-20 Tamilini. All rights reserved. No part can be reproduced.

Up ↑

error: