கொக்கும் நரியும்

பாட்டியால் முன்பு போல தோட்டத்துக்கு போக முடிய-வில்லை. கொக்கும் நரியும் தோட்டத்தில் வேலை பார்த்து வந்தன.

கொக்கு வேலை முடிந்ததும் நன்றாக குளித்து-விட்டு சுத்தமாக வீட்டுக்கு வரும்.

பாட்டி தோட்டத்துக்கு வராததால், நரி சரியாக வேலை பார்க்காமல் சோம்பேறி ஆனது. அங்கு சகதியில் விளையாடும். நண்டு மற்றும் பூச்சிகளை பிடித்து சாப்பிடும். மாலையில் குளிக்காமல் அப்படியே வீட்டுக்கு வரும்.

இதை கவனித்த பாட்டி, நரிதான் கடுமையாக வேலை செய்யுது போல என நினைத்தார்.

எனவே கொக்கை, “நீ இனிமே எங்கூட இருக்காத. போயிடு” என்று விரட்டி விட்டார்.

நரி மட்டும் தோட்டத்துக்கு சென்று வந்தது.

சில மாதங்கள் ஆயின.

தோட்டத்தில் இருந்து காய், பழம், பருப்பு எதுவும் நரி கொண்டு வருவது இல்லை.

பாட்டிக்கு சந்தேகம் வந்தது.

ஒரு நாள் பாட்டி மெதுவாக நடந்து தோட்டத்துக்கு போனார். அங்கே நரி எந்த வேலையும் செய்யவில்லை. மண்ணில் புரண்டு விளை-யாண்டது. அனைத்து செடிகளும் காய்ந்து இருந்தன.

பாட்டி இதெல்லாம் பார்த்து-விட்டு சோகமாக வீடு திரும்பினார்.

Pages: 1 2 3 4

 © 2019-20 Tamilini. All rights reserved. No part can be reproduced.

Up ↑

error: Alert: Content is protected !!