ஏழு அதியசங்கள் (பழையவை)

ஆர்டெமிஸ் கோயில்

கிரேக்க கோயில்
CC-BY-SA-2.5

– இது பல கட்டங்களாக பல நூற்றாண்டுகளுக்கு கட்டப்பட்டது.

– 550 பொ.மு.வில் கட்டி முடிக்கப்பட்டது. பல கட்டிட வல்லுன-ர்களால் அமைக்கப்-பட்டது. லிடிய மன்னன் க்ரோய்சஸ் இந்த கோவிலை கட்ட ஆணையிட்டு தொடங்கி வைத்தார்.

– இது கிரேக்க கடவுளின் கோயில்.

– இது இப்போதைய துருக்கியில் இருந்தது.

– இந்த கோயிலின் இப்போதுள்ள உடைந்த பகுதிகளை கீழே உள்ள படத்தில் பார்க்கலாம்.

easy tamil articles

மௌசோலியம் ஹாலிகர்னாசஸ்

இது மௌசோலஸ் என்ற ஆளுநரின் கல்லறை. ஹாலிகர்னாசஸ் இப்போதைய போட்ரம் என்ற இடத்தின் பழைய பெயர். இது துருக்கியில் உள்ளது.

351 பொ.மு.வில் கட்டப்பட்டது. 41 மீட்டர் உயரம் உடையது. பல வகையான சிலைகளால் நுட்பமாக வடிவு அமைக்கப்-பட்டது.

இது 12 முதல் 15-ஆம் நூற்றாண்-டுகளில் பல நில நடுக்கங்-களால் உடைந்தது. மௌசோலஸ் கல்லறையின் புகழ், அவரின் பெயரே பிற்காலத்தில் கல்லறைக்கு பெயரானது. மௌசோலியம் என்றால் கல்லறைக்கு மேல் எழுப்பப்-படும் கட்டட அமைப்பு ஆகும்.


ரோட்ஸ் சிலை

  • இது கிரேக்கர்-களின் சூரிய கடவுளின் சிலை.
  • ரோட்ஸ் நகர துறை-முகத்தில் 280 பொ.மு-வில் கட்டப்பட்டது.
  • டிமெட்ரியஸ் என்ற மன்னன் கிரேக்கர்-களிடம் போரில் தோற்று-விட்டான். அதனால் அவன் படையின் எல்லா ஆயுதங்-களையும் உருக்கி இந்த சிலை செய்யப்-பட்டது.
  • அந்த படை வீரர்-களும் சிலை கட்டும் வேலைகளை செய்தார்கள்.
  • வெளிப்-புறம் பளிங்கு கல்களால் செய்யப்-பட்டது.
  • கட்டி முடிய 12 வருடங்கள் ஆனது.
  • 226 பொ.மு-வில் வந்த நில நடுக்கத்தில் இந்த சிலை சேதம் அடைந்து விழுந்தது.
  • அப்படியே 200 வருடங்-களுக்கு கீழே கிடந்தது.
  • பின்பு வந்த அரபு படைகள் இதனை எடுத்து சென்று உருக்கி-விட்டன.

அலெக்-சாண்-டிரியா-வின் கலங்-கரை விளக்கம்

  • அலெக்-சாண்-டிரியா நகரம் மாவீரன் அலெக்-சாண்ட-ரால் உருவாக்கப்-பட்டது.
  • இங்கே உள்ள ஒரு தீவில் இந்த கலங்-கரை விளக்கம், 280 பொ.மு-வில் கட்டப்பட்டது.
  • தாலமி I சோதர் என்ற மன்னர் இதை கட்டினார்.
  • இதன் உயரம் தோரா-யமாக 134 மீட்டர்.
  • இதில் இருந்த கண்ணாடி, பகலில் சூரிய ஒளி-யையும், இரவில் தீயின் ஒளி-யையும் எதிரொ-ளித்தது. இந்த ஒளி கடலில் 55 கிலோ மீட்டர் வரை தெரியும்.
  • கிராணைட் மற்றும் சுண்ணாம்பு கல்களால் அமைந்தது.
  • 956, 1300-கள் மற்றும் 1480 பொ.ச-களில் ஏற்பட்ட பல நில நடுக்-கங்களால் இது முழுவதும் அழிந்தது.
  • இதன் எஞ்சிய பாகங்கள் இப்போதும் கடலுக்கு அடியில் உள்ளன.

Pages: 1 2

© 2020 – 26 Tamilini. All rights reserved. No part can be reproduced.

Up ↑