ஏழு அதியசங்கள் (பழையவை)

கிசாவின் பெரிய பிரமிட், எகிப்து

Pyramid tamil article
  • இது இப்போதைய கெய்ரோ பக்கத்தில் உள்ள கிசா பீட பூமியில் உள்ளது.
  • இது குஃபூ மன்னரின் ஆட்சி காலத்தில் (2585 – 2565 பொ.மு) கட்டப்-பட்டது.
  • இதன் உயரம் – 146 மீட்டர். தரை அகலம் – 230 மீட்டர்.
  • இது கட்டப்-பட்டதில் இருந்து 3000 வருடங்களுக்கு மிக உயரமான அமைப்பு என்று பெயர் பெற்றது.
  • 20 லட்சம் செங்கல்-களால் கட்டப்பட்டது. இதில் பல செங்கல்கள் மிகவும் பெரியவை. இவ்வளவு பெரிய கல்களை எப்படி சரியாக நகர்த்தி துல்லியமாக பொருத்-தினார்கள் என்பது இன்றும் அதிசயமாக உள்ளது.
  • இது குஃபூ மன்னரின் கல்லறை ஆகும்.

பாபிலோனிய தொங்கும் தோட்டம்

7 wonders in tamil

இது நெபுசாட்னேசர் II-ம் மன்னரால் கட்டப்பட்டது என நம்பப்-படுகிறது. இது தற்போதைய ஈராக்கின், பாக்தாத்தில் இருந்து 80 கி.மீ தொலைவில் இருந்தது. மன்னர் மற்றும் அமைச்-சர்களின் குடும்பங்கள் ஓய்வு எடுக்க ஒரு மாளிகை இருந்தது. அந்த மாளிகை முழுவதும் இந்த தோட்டம் படர்ந்து அமைக்கப்-பட்டது. பழ மரங்கள், பூ மற்றும் மூலிகை செடிகள் இருந்தன.

இந்த தோட்டத்தின் உடைந்த பகுதிகள் எதுவும் இப்போது இல்லை. இதனை பற்றிய பழைய வரலாற்று புத்தகங்கள், கல்வெட்டு சான்றுகள் கிடைத்து உள்ளன. இந்த தகவல்கள் மூலம் இந்த வரைபடம் உருவாக்கப்பட்டது.


ஜீயசின் சிலை, ஒலிம்பியா

  • இது இப்போதைய கிரேக்க நாட்டில் இருந்தது.
  • சிற்பி பிடியாஸ் என்பவரால் 430 பொ.மு.வில் செதுக்கப்-பட்டது.
  • ஜீயஸ், ஒலிம்பிய கடவுள்களின் மன்னர் ஆவார். இது அவருடைய சிலை.
  • உயரம்: 12 மீட்டர்
  • தங்கம் மற்றும் தந்தத்தினால் அமைந்தது.
  • ஒலிம்பியா என்ற இடத்தில்-தான் ஒலிம்பிக் விளையாட்டுகள் முதலில் உருவாகின.
உலக அதிசயங்கள்

Pages: 1 2

© 2020 – 24 Tamilini. All rights reserved. No part can be reproduced.

Up ↑